463
உலகமெங்கும் காய்கறிகள் விலை அதிகரிப்பு தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இதனால் இலங்கையிலும், தற்போது எதிர்பாராத வகையில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.
அதிலும் கொழும்பிலுள்ள முதல் நிலை வார சந்தையின்படி 3 ஆண்டுகள் இல்லாத வரலாறு காணாத விடயமாக தக்காளியின் அதிகரித்து இருக்கிறது.
அதன்படி, ஒரு கிலோ போஞ்சி மற்றும் கறி மிளகாய் 600 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 500 ரூபாய்க்கும், ஒரு கிலோ கரட் 400 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒருகிலோ 360 ரூபாய்க்கும், லீக்ஸ் ஒரு கிலோ 320 ரூபாய்க்கும், உள்நாட்டு உருளைக் கிழங்கு ஒரு கிலோ 280 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும், கடந்த 2018 ஆம் ஆண்டுக்கு பிறகு, மரக்கறிகள் விலை அதிகரித்துள்ளதாக ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையம் தெரிவித்துள்ளது.