இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 396 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.
இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. இருப்பினும் அதன் பிறகு பங்கு வர்த்தகத்தில் ஏற்ற இறக்கம் நிலவியது. இறுதியில் பங்கு வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், மாருதி சுசுகி மற்றும் மகிந்திரா அண்டு மகிந்திரா உள்பட மொத்தம் 9 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் எஸ்.பி.ஐ. உள்பட மொத்தம் 21 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,603 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,729 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 142 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.269.62 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.81 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 396.34 புள்ளிகள் குறைந்து 60,322.37 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 110.25 புள்ளிகள் சரிவு கண்டு 17,999.20 புள்ளிகளில் முடிவுற்றது.