தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் க்யாகுல் நகரில் மிகப் பெரிய சிறைச்சாலை உள்ளது. இச்சிறையில் உள்ள கைதிகள் இடையே அடிக்கடி அதிகார போட்டி எழுந்து அது பெரும் மோதலாக வெடித்து வந்திருக்கின்றன.
தற்போது அதே போல் எழுந்து அதிகாரப் போட்டியால் பயங்கரமான தாக்குதல் சம்பவம் நடந்திருக்கிறது . இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை 68 மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிய வந்திருக்கிறது.
இதையடுத்து காவல்துறையினர் குவிக்கப்பட்டு கலவரம் கட்டுப் படுத்தப் பட்டிருக்கிறது.
இதே போல் கடந்த செப்டம்பர் மாதத்தில் நடந்த கலவரத்தில் 119 பேர் கொல்லப்பட்டு இருக்கும் நிலையில் மீண்டும் ஒரு கலவரம் நடந்து 68 பேர் கொல்லப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட அதிகாரம் மோதலின் விளைவாகத்தான் இந்த கலவரங்கள் நடைபெற்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
நிலைமையை ஆய்வு செய்வதற்காக பாதுகாப்பு குழு கூட்டி இருப்பதாக அந்நாட்டின் அதிபர் கில்லேர்மோ லாஸ்லோ தெரிவித்திருக்கிறார்.