232
நடிகை காஜல் அகர்வால் தென்னிந்தியளவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர். இவர் தமிழ், தெலுங்கு என அனைத்து டாப் நடிகர்களுடன் நடித்துவிட்டார்.
மேலும் கடந்த ஆண்டு நடந்த இவரின் திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார் காஜல்.
அந்த வகையில் இவர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வந்த இந்தியன் 2, படத்தில் வயதான தோற்றத்தில் நடிப்பதாக இருந்தது.
ஆனால் தற்போது அப்படத்தில் அவருக்கு பதிலாக வேறுவொருவர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் தற்போது நடிகை காஜல் அகர்வால் கர்பமாக இருப்பதாகவும், அதன் காரணமாகவே திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திவைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.