சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் காய்கறிகளின் வரத்து குறைந்து அதன் விலை உச்சத்தை தொட்டு வருகிறது. குறிப்பாக சென்னையில் காய்கறிகளின் விலை சாமானிய மக்களை கதிகலங்க வைத்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி கோயம்பேட்டில் கிலோ தக்காளியின் விலை 65 ரூபாய்க்கும், வெங்காயம் கிலோ 40 ரூபாய்க்கும் ,அவரைக்காய் ,பீன்ஸ், பீட்ரூட் ஆகியவை 50 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 40 ரூபாய்க்கும் , உருளைகிழங்கு 35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதேசமயம் சில்லறை வணிகத்தில் கிலோ தக்காளியின் விலை 75 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் சென்னையில் இன்று சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி விலை 90 முதல் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தீபாவளி விடுமுறை காரணமாக காய்கறிகள் பறிப்பதற்கு போதிய தொழிலாளர்கள் கிடைக்காத நிலையிலும் , தொடரும் கனமழை காரணமாகவும் காய்கறி வரத்து குறைந்து விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.அதே சமயம் சென்னையில் கனமழை காரணமாக பூக்கள் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. தொடர் கனமழையால் பூக்கள் அழுகி குப்பையில் கொட்டப்பட்டுள்ளன.
225