இங்கிலாந்தில் வசிக்கும் மக்கள், தங்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள ஒரு மாதத்திற்கு முன்பே முன்பதிவு செய்துகொள்ள முடியும் என சுகாதார தரப்பினர் அறிவித்துள்ளனர்.
தற்போது, இரண்டாவது டோஸ் தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்கள் ஆறு மாதங்கள் நிறைவடையும் வரை முன்பதிவு செய்ய முடியாது என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஆனால் தடுப்பூசி செலுத்தி ஐந்து மாதங்கள் கடந்த 50 வயதிற்கு மேற்பட்டவர்களும் அதிக ஆபத்துள்ளவர்களும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸுக்கு எதிரான பாதுகாப்பை நீடிக்க உதவும் வகையில், பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
மேலும் அதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்தப்பட்டுள்ள நிலையில் குளிர்காலத்தில் மக்களைப் பாதுகாக்க தடுப்பூசிகள் சிறந்த வழி என சுகாதார அமைச்சின் செயலாளர் சாஜித் ஜாவித் கூறியுள்ளார்.