மும்பை: நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் தடுப்பு ஆணையத்தில் (என்சிபி) இன்று ஆஜரானார். அவர் காலை 11 மணி முதல் பிற்பகல் 2 அங்கே இருந்தார்.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில், போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகளால் அக்டோபர் 2ஆம் தேதி சொகுசு கப்பல் ஒன்றில் வைத்து கைதுசெய்யப்பட்டார் ஆர்யன் கான்.
இந்த வழக்கு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இரண்டு முறை ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்த நிலையில் மூன்றாவது முறையாக மும்பை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்து நீதிமன்றம் ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கியது.
ஜாமீனில் விடுதலை 22 நாட்கள் சிறையில் இருந்த ஆர்யன் கான் அக்டோபர் 30ம் தேதி மும்பை ஆர்தர் சாலை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் ஆர்யன் கானிடம் போதைப்பொருள் இருப்பதைக் கண்டுபிடிக்கவில்லை என்றும், ஆனால் அவரது வாட்ஸ்அப் உரையாடல்களில் “போதைப்பொருள் டீலிங்கில்” அவருக்கு தொடர்பு இருந்தது மற்றும் வெளிநாட்டு போதைப்பொருள் விற்பனை நிறுவனத்துடன் தொடர்பு இருந்தது ஆகியவை நிரூபணம் ஆனது நிரூபிக்கபட்டதாக நீதிமன்றத்தில் கூறியது.
14 நிபந்தனைகள் இதனிடையே ஜாமீன் வழங்கியபோது மும்பை உயர்நீதிமன்றம் 14 நிபந்தனைகளை பட்டியலிட்டுள்ளது. ஆர்யன் கான் காவல்துறைக்கு தெரிவிக்காமல் மும்பையை விட்டு வெளியேற முடியாது மற்றும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் போதைப்பொருள் தடுப்பு ஏஜென்சி முன் ஆஜராக வேண்டும். இதேபோன்ற செயல்களில் மீண்டும், ஈடுபடக்கூடாது, அவரது நண்பர் அர்பாஸ் போன்ற மற்ற குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் தொடர்பு கொள்ளக்கூடாது, ஊடகங்களுடன் பேசக்கூடாது என்பது போன்ற நிபந்தனைகள் அப்போது விதிக்கப்படன.
ஜாமீனை ரத்து செய்ய முடியும் இந்த நிபந்தனைகளில் ஏதேனும் மீறப்பட்டால் ஜாமீனை ரத்து செய்ய போதைப்பொருள் தடுப்பு பெரிய நீதிமன்றத்தை கோரலாம். இன்று வெள்ளிக்கிழமை என்பதால் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆர்யன் கான் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷாருக்கான் கொண்டாட்டம் நவம்பர் 2ம் தேதி ஷாருகான் தனது பிறந்த நாளை கொண்டாடினார். மேலும் தீபாவளி தினத்தன்று தனது மகன் உள்ளிட்ட குடும்பத்தாருடன் இருக்கவேண்டும் என்று அவர் விரும்பினார். அந்த விருப்பம் நிறைவேறியதால், ஷாருக்கான் வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது குறிப்பிடதக்கது.