கனடாவின் ஆர்லியன்ஸில் ஹாலோவீன் நாளில் குழந்தை ஒன்றை கடித்துக்குதறிய நாயை கருணைக்கொலை செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்லியன்ஸில் உள்ள ஹார்வெஸ்ட் வேலி அவென்யூ பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்து ஒழுங்குமுறை சேவை மற்றும் தொடர்புடைய அதிகாரிகளுக்கு அவசர தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
ஹாலோவீன் நாளில் குழந்தை ஒன்றை நாய் தாக்கியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து ஒட்டாவா அவசர மருத்துவ உதவிக்குழுவினர் குழந்தையை பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து காயங்கள் காரணமாக குழந்தை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த நிலையில் தாக்குதலில் ஏற்பட்ட நாய் மீது மூன்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
அதில், ஒரு நபரையோ அல்லது வீட்டு விலங்கையோ தூண்டிவிடாமல் நாய் கடிக்காது அல்லது தாக்காது என்பதை உறுதி செய்ய தவறியது. நாயை கட்டுக்குள் வைத்திருக்க தவறியது. மேலும், தாக்குதலில் ஈடுபட்ட நாயை பதிவு செய்ய தவறியது என பட்டியலிட்டுள்ளனர்.
மட்டுமின்றி அதுபோன்ற நாயின் முகவாய்க்கு கவசமிடவும், கட்டுக்குள் வைத்துக்கொள்ளவும் நகர நிர்வாகம் தொடர்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனிடையே, குழந்தையை தாக்கியதாக அடையாளம் காணப்பட்ட நாயானது அமெரிக்கன் புல்டாக் வகை எனவும், மீட்பு அமைப்புக்கு சொந்தமானது எனவும் தெரிய வந்துள்ளது. தற்போது குறித்த நாய் கருணைக்கொலையை எதிர்நோக்கியுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.